ஜெய்ஹிந்துபுரம் (ச&ஒ) காவல்நிலைய சார்பு ஆய்வாளர் ஆறுமுகம் ரோந்து பணியில் இருந்தபோது ஜீவாநகர் 1வது
தெருவில் சந்தேகப்படும்படி நின்றிருந்த ஏழு நபர்களிடம் விசாரணைசெய்தபோது1.சண்முகநாதன்,2.முத்துமணிபோஸ்,3.அஜித்குமார்,4.கார்த்திக்குமார்,5.சித்தமணிகண்டன6.மணிகண்டன்,7.கரண் என தெரியவந்தது ஆகவே அவர்களை சோதனை செய்தபோது அவர்களிடம் ஆபத்தை விளைவிக்ககூடிய இரண்டு கத்திகள், ஒரு அருவாள், ஒரு உருட்டுக்கட்டை, இரண்டு மிளகாய்பொடி பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காவல் ஆய்வாளர் பாலமுருகன் ஏழு நபர்களையும் கைது செய்து விசாரணை செய்ததில் ஏழு நபர்களும் சேர்ந்து ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளதாக ஒப்புக்கொண்டனர். இதனால் ஏழு நபர்களையும் நேற்று நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.