17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் அருகே மதுபோதையில் அரசு பஸ்சை வழிமறித்து ரகளையில் ஈடுபட்ட இருவர் காவல்துறையினர் கைது செய்தனர்..

செங்கம் அருகே மதுபோதையில் அரசு பஸ்சை வழிமறித்து ரகளையில் ஈடுபட்ட இருவர் காவல்துறையினர் கைது செய்தனர்..

எழுதியவர்: Askar March 17, 2020, 10:15 am

செங்கம் அருகே மதுபோதையில் அரசு பஸ்சை வழிமறித்து ரகளையில் ஈடுபட்ட இருவர் காவல்துறையினர் கைது செய்தனர்..

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த வளையாம்பட்டு ஊராட்சி பகுதியில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. வளையாம்பட்டு பகுதியை சேர்ந்த மாதவன் அவரின் நண்பர் ராகவன் இருவரும் பகலிலேயே மது அருந்திவிட்டு சாலையில் தலைமை ரகளையில் ஈடுபட்டு வந்தனர். அவ்வழியாக வந்த பேருந்தை வழிமறித்து இடையூறு ஏற்படுத்தினர். மது போதையில் ரகளை செய்த இருவரையும் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் அப்புறப்படுத்த முயன்றனர். அவர்களையும் தகாத வார்த்தைகளால் ரகளை ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனர் செங்கம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து செங்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மது போதையில் ரகளை செய்த மாதவன் மற்றும் ராகவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். போருந்தை வழிமறித்ததால் பதினோராம் எழுத சென்ற பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதுபோன்று சம்பவத்தில் ஈடுபடும் நபர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

செய்தியாளர் செங்கம் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!