17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரோனோவின் கொடூர “முகம்” பலி என்னிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு..

கொரோனோவின் கொடூர “முகம்” பலி என்னிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு..

எழுதியவர்: Askar March 17, 2020, 9:37 am

கொரோனோ தாக்கத்தால் உலகம் முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உலக நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் கொரோனா‌ பாதிப்பால் 3200-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

சுமார் 80,86‌0 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தப்படியாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி மாறியுள்ளது. அங்கு, 2500-க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில், சுமார் 27 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் நேற்று ஒரு நாளில் மட்டும், 368 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.

ஈரானில், 853 பேர் உயிரிழந்த நிலையில், சுமார் 15 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 70 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3 ஆயிரத்து 900-க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் காரணமாக போர்ச்சுக்கல் நாட்டில் முதல் உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.

லிஸ்பனில், கடந்த சில நாள்களாக மருத்துவமனைவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 80 வயதான முதியவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கொரோனா பாதிப்பால் போர்ச்சுக்கல்லில் 331 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!