17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இலவச வீட்டு மனை பட்டா கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி- ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

இலவச வீட்டு மனை பட்டா கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி- ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

எழுதியவர்: Askar March 16, 2020, 9:10 pm

இலவச வீட்டு மனை பட்டா கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி- ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கரிசக்கால பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார்.பல ஆண்டுகளாக இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியரிடமும் பல அரசு அதிகாரிகளிடமும் மனு கொடுத்து வந்தார்.

இந்த நிலையில் அவரது சொந்த ஊரில் இலவச வீட்டு மனை பட்டா கோரி அரசு அதிகாரிகளை சந்திக்கும் போது லஞ்சம் கேட்டதாகவும் குற்றம் சாட்டுகிறார்.

ஆறு ஆண்டுகளாக மன அழுத்தத்தில் இருந்த மணிகண்டன் இன்று மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த போது மறைத்து வைத்திருந்த டீசலை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.

உடனே அருகில் இருந்த காவல்துறையினர் அவரை அப்புறப்படுத்தி அவருக்கு முதலுதவி அளித்தனர்.

திங்கட்கிழமை பொதுமக்கள் கூடும் மண நாளில் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!