தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே உள்ள பட்டாபி நகர் பகுதியில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் கல்லாங்குத்து எனும் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கடந்த சில மாதங்களாக ராயக்கோட்டை , உத்தனப்பள்ளி , காடு செட்டிபட்டி ஆகிய பகுதியை சேர்ந்த 66 நபர்கள் குடிசை போட்டு இடத்தை ஆக்கிரமித்து வந்தனர். இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இடத்தை காலி செய்யும்படி பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் காலி செய்யாததால் பாலக்கோடு வட்டாட்சியர் ராஜா மற்றும் வருவாய் துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் சென்று நோற்று காலை 11.மணியாளவில் ஜே சிபி மூலம் அப்பகுதியில் இருந்த 66 குடிசை வீடுகளை அகற்றினர். மேலும் வட்டாட்சியர் கூறியதாவது கல்லாங்குத்து புறம்போக்கு என்பது பாதுகாக்கப்பட்ட பகுதியாகும் இப்பகுதியில் பட்டா வழங்க சட்டப்படி அனுமதி இல்லை வீடு இல்லாதவர்கள் முறைப்படி பட்டா வேண்டி மனு செய்தால் உரிய நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு வேறு இடத்தில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் அத்துமீறி இப்பகுதியில் மீண்டும் குடிசை அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே ஆக்கிரமிப்பு அகற்றம்..
எழுதியவர்: Askar March 16, 2020, 6:04 pm




You must be logged in to post a comment.