மதுரையில் இஎஸ்ஐ மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு! நோயாளிகள் கடும் அவதி!!
மதுரையில் உள்ள பழங்காநத்தம் இஎஸ்ஐ மருத்துவமனையில் தினசரி சர்க்கரை நோயாளிகள் மற்றும் இருதய நோயாளிகள் வாராவாரம் மாத்திரைகள் வாங்குவது வழக்கம். சமீபகாலமாக குறிப்பிட்ட சில மாத்திரைகள் அங்கே கிடைப்பதில்லை அரசு மருத்துவமனையில் நாடுவது ஏழை எளிய மக்களை மேலும் இவர்கள் பணம் கட்டி தான் மருத்துவ சேவையை பெறுகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது. அப்படி பணம் கட்டியும் போதிய மருந்து மாத்திரைகள் அங்கே கிடைப்பதில்லை.
சர்க்கரை நோயாளிகளும் இருதய நோயாளிகளும் ஒரு சில மாத்திரைகளை வெளியே வாங்க சொல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். அரசுக்கு பணம் கட்டியும் நோயாளிக்கு தேவையான முக்கியமான மாத்திரைகளை அதிக விலை கொடுத்து சாதாரண தொழிலாளர்கள் எப்படி வாங்குவது. மாதத்திற்கு அந்த மாத்திரையின் விலை ஆயிரத்தை கடந்து விடுகிறது இதனால் நோயாளிகள் சிலர் மாத்திரைகளையும் ஒரு சிலர் இரண்டு மாத்திரைகள் வாங்க வேண்டிய இடத்தில் ஒரு மாத்திரையை கடையில் வாங்கி உட்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை போக்க அனைத்து மாத்திரை மருந்துகளும் கிடைக்கும் வகையில் சுகாதார துறை அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா மேலும் மதுரை மாவட்ட இஎஸ்ஐ நிர்வாகம் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியாளர் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என நோயாளிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.