18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திமுக சார்பாக நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு….

திமுக சார்பாக நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு….

எழுதியவர்: ஆசிரியர் March 16, 2020, 12:34 am

15.03.2020 இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள திருப்புல்லாணியில் நேற்று தொடங்கிய திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வந்தது.

போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதல் பரிசு கோப்பை மற்றும் 15,000 ரூபாயை மாவட்ட கழக பொறுப்பாளர் காதர்பாட்சா வழங்கினார்.

இரண்டாம் பரிசு கோப்பை மற்றும் 10,000 ரூபாயை மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் பவானி ராஜேந்திரன் வழங்கினார்.

மூன்றாம் பரிசு கோப்பை மற்றும் 5,000 ரூபாயை திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் புல்லானி வழங்கினார்.

சிறந்த ஆட்டநாயகன் பரிசை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகு கோப்பை மற்றும் 2,500 ரூபாயை வழங்கினார்.

ஆறுதல் பரிசு மற்றும் பதக்கங்களை மாவட்ட ஒன்றிய நகர கழக, நிர்வாகிகள் வழங்கினார்கள். இப்போட்டியில் கலந்து கொண்ட 54 கிரிக்கெட் அணி வீரர்களுக்கும் திமுக இளைஞரணி சார்பில் நன்றிகளை தெரிவித்து கொண்டார்கள்.

கீழை நியுஸ்காக கீழக்கரையிலிருந்து SKV சுஐபு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!