தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள காடு சிகரல அல்லி கிராமத்தில் நேற்றிரவு சுமார் 10 மணி அளவில் 2 வயது ஒற்றை ஆண் யானை சுமார் 25 அடி ஆழம் உள்ள கிணற்றில் விழுந்து பிளிறியது. துர்க்கம் காட்டுப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வழிதவறி சிகரல அல்லி கிராமத்திற்க்கு வந்துள்ளது. யானையின் பிளிறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் பாலக்கோடு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக விரைந்து வந்த பாலக்கோடு வனத்துறையினர் ஜேசிபி மூலம் கிணற்றிலிருந்து தரைப்பகுதிக்கு கால்வாய் அமைத்து சுமார் 7 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு யானையை உயிருடன் மீட்டு அருகில் உள்ள சொக்கம்பட்டி காப்பு காட்டில் விட்டனர். தண்ணீர் தேடி வழிதவறி விவசாய கிணற்றில் விழுந்த யானையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கிணற்றில் விழுந்த யானையை உயிருடன் மீட்ட வனத்துறையினர்..
எழுதியவர்: Askar March 15, 2020, 8:14 pm




You must be logged in to post a comment.