18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » “கொரோனா வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை”- சார்க் நாடுகள் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு…

“கொரோனா வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை”- சார்க் நாடுகள் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு…

எழுதியவர்: Askar March 15, 2020, 7:59 pm

“கொரோனா வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை”- சார்க் நாடுகள் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு…

சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் இந்தியாவையும் கடுமையாக பாதித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா குறித்து சார்க் நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணியளவில் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இதில்,இந்திய பிரதமர் மோடி, ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி, இலங்கை அதிபர் கோத்தபய, வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா  உட்பட பாகிஸ்தான் , பூடான் , நேபாளம் , மாலத்தீவு , பாகிஸ்தான் நாட்டின் தலைவர் பங்கேற்றனர்.

இதில் பேசிய பிரதமர் மோடி , கொரோனா வைரஸ் ( கோவிட் -19 ) நோயை கொள்ளை நோயாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. சார்க் நாடுகளின் மக்கள் ஒருவருடன் ஒருவர் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள்,நோயை கட்டுப்படுத்த தயாராக இருப்போம், ஆனால் அச்சமடைய தேவையில்லை என்றார்.

மேலும் கொரோனா வைரஸ் குறித்து குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது. கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளோம். கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கொரோனா வைரஸ் எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இப்போது கூட கணிக்கும் நிலை இல்லை என கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதில் சார்க் நாடுகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக போரிடுவதற்கு பலமான செயல்திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என சார்க் நாடுகள் தலைமைக்கு பிரதமர் மோடி முன்மொழிந்தார். பிரதமர் மோடியின் இந்த முயற்சிக்கு சார்க் நாடுகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும் கொரோனாவை தடுக்க அவசர கால நிதியாக இந்தியா சார்பில் 10 மில்லியன் டாலர் வழங்கப்படும் எனவும் மோடி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தி தொகுப்பு அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!