பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பாக ,இந்திய தேசம் முழுவதும் மாணவ, மாணவியருக்கான உயர் கல்வி உதவித்தொகை ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இராமநாதபுரம் மாவட்டம்,
பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவின் சமுக மேம்பாட்டுத்துறை சார்பாக இன்று (15/3/2020) கேணிக்கரை டி.எஸ்., மஹாலில் நடைபெற்றது. மாவட்ட செயலர் எம்.எஸ்.எஸ் செய்யது முகமது இப்ராஹீம் வரவேற்றார். மாவட்ட தலைவர் எம்.முகமது மன்சூர் தலையிமையுரை ஆற்றினார். ஆக்ஸஸ் இந்தியாவின் பயிற்சியாளர் சீனி சுல்தான் இப்ராஹீம் மாணவர்களுக்கு திறன் மேம்படுத்த வகுப்பு எடுத்தார்.சிறப்பு அழைப்பாளராக மாநில பொருளாளர் டி.எம். இப்ராஹிம் பாதுஷா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக ஹமீதியா உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜவஹர் பாரூக், முகவை எஜூகேஷன் எம்பவர்மென்ட் அறக்கட்டளை நிர்வாகி முகம்மது பாசுல்லாக்கான் கலந்து கொண்டனர்.இதில் 30 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.இறுதியாக சமூக மேம்பாட்டுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகம்மது ஆசிப் நன்றி கூறினார்.
இராமநாதபுரத்தில் உயர் கல்வி மாணவர்களுக்கு பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா சார்பில் உதவித்தொகை
எழுதியவர்: mohan March 15, 2020, 12:07 pm




You must be logged in to post a comment.