17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விதியை மீறிய ஷேர் ஆட்டோக்கள் 18 பறிமுதல்

விதியை மீறிய ஷேர் ஆட்டோக்கள் 18 பறிமுதல்

எழுதியவர்: mohan March 15, 2020, 11:23 am

மதுரையில் ஆட்டோ உயிரிழப்புகள் அதிக அளவில் நடப்பதால் மதுரை காவல்துறை ஆணையாளர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஏடிஜிபி  உத்தரவின் பேரில்அதிரடியாய் களம் இறங்கிய காவல்துறையினர் நேற்று கேகே நகர் மற்றும் அண்ணாநகர் பகுதிகளில் விதிமீறி சென்ற ஷேர் ஆட்டோக்களை பறிமுதல் செய்து மேலும் உரிய ஆவணங்கள் இன்றி சென்ற ஆட்டோக்களுக்கு அபராதமும் விதித்தனர். நேற்று முன்தினம் பாண்டி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்து விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த பெண் ஆட்டோ கவிழ்ந்து விபத்தில் பலியானது குறிப்பிடத்தக்கது. இதை நாம் கீழை நியூஸ்(  செய்திகளில் செய்தியாக வெளியிட்டு இருந்தோம். மேலும் ஷேர் ஆட்டோக்களை உயிரிழப்புகள் அதிகம் நடப்பதாக தகவல் தெரிவித்திருந்தோம். அதன் அடிப்படையில் மதுரை நகர காவல் துறை ஆணையாளர்  துரித நடவடிக்கையால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. குறிப்பிடத்தக்கது மேலும் இதே போன்று அனைத்து பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்பதும் விதி மீறி செயல்படும் ஷேர் ஆட்டோக்களை பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!