17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குடிநீர் வீண் .பொதுமக்கள் கண்ணீர்

குடிநீர் வீண் .பொதுமக்கள் கண்ணீர்

எழுதியவர்: mohan March 15, 2020, 10:45 am

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 18 வது வார்டு பைபாஸ் சாலை சர்வீஸ் சாலை அபர்ணா டவர் எதிரே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பல லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி சாலையில் செல்கிறது. மேலும் இப்பகுதி வழியாக தினசரி ஆய்வு மேற்கொள்ளும் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அப்பகுதி மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கண்களுக்கு இது தெரியவில்லையா புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.  அதிகாரிகள் மக்கள் வரிப்பணத்தில் தான் நாம் சம்பளம் வாங்கும் என்ற எண்ணம் இல்லை என்று பல நாட்களாக குடிநீர் வீணாகி செல்கிறது என துளிகூட அச்சமில்லாமல் செல்கிறார்கள் என குற்றம்சாட்ட அப்பகுதி மக்கள் விரைந்து குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் வீணாகாமல் மேலும் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிடுவார் என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் குடிநீர் வீணாக சென்று இருப்பதைக் கண்டும் காணாமல் இருந்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் ஆதங்கமான கோரிக்கையாக உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!