17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முதலமைச்சர் நிகழ்ச்சிக்காக பள்ளபட்டி அருகே நான்கு வழிச்சாலையை அரை மணி நேரம் நிறுத்திய போலீசார்

முதலமைச்சர் நிகழ்ச்சிக்காக பள்ளபட்டி அருகே நான்கு வழிச்சாலையை அரை மணி நேரம் நிறுத்திய போலீசார்

எழுதியவர்: mohan March 14, 2020, 7:12 pm

திண்டுக்கல் மாவட்டத்திற்கு  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மருத்துவ அடிக்கல் நாட்டு விழாவிற்கு வந்திருந்தார். திண்டுக்கல் மாவட்டத்தின் முதல் எல்லையாக இருக்கக்கூடிய பள்ளபட்டி சிப்காட் பகுதியில் அதிமுக ஒன்றியத்தின் சார்பாக வரவேற்பு நிகழ்ச்சி வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட்ட நிகழ்ச்சியின்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சுமார் ஒரு பத்து நிமிடம் மட்டுமே பள்ளபட்டி சிப்காட் முன்பு அமைக்கப்பட்டுள்ள வரவேற்பு நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் பேசிவிட்டு சென்றார்.      அப்போது பேசிய போது காலை 6 மணியில் முதலிலிருந்தே  பொதுமக்கள் முதலமைச்சர் வருகைக்காக காத்திருப்பதாகவும் குடிக்கக்கூட தண்ணீர் கொடுக்கவில்லை எனவும் முதலமைச்சரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். திண்டுக்கல்லில் 10: 30 மணிக்குத் தான் அடிக்கல் நாட்டு விழா அதன் காரணமாக தாமதம் ஆகிவிட்டது என முதலமைச்சர் பொதுமக்களிடம் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சக்திவேல் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தவர்கள் முதலமைச்சர் நிகழ்ச்சி இருப்பதாக கூறி மதுரை – திண்டுக்கல் நான்கு வழி சாலை   பகுதியை  சுமார் ஒரு மணிநேரம் கழித்து எந்த வாகனமும் செல்லாத வகையில் நிறுத்தினார்கள்.

        இதனை அறிந்த பொதுமக்கள் மிகுந்த எரிச்சல் அடைந்தார்கள். அதுவும் காலை நேரம் என்பதால் தனியார் மில் வேலைகளுக்கும் மற்றும் பல்வேறு பணிகளுக்கும் சென்ற பொதுமக்கள் ஒரு மணி நேரம் காத்திருந்து மிக கடுமையாக பாதிக்கப் பட்டதாக தெரிவித்தனர். அதிமுகவின் அரசு நிகழ்ச்சியாக இருந்தும் முதலமைச்சரின் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெண்கள் கூட்டம் கொடுத்து வந்ததாக இப்பகுதி பொதுமக்கள் பேசிக்கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு ஊராட்சி ஒன்றியத்தை பொருத்த அளவு ஆளுங்கட்சியில் இருக்கக்கூடிய பெரும்பாலான நிர்வாகிகள் கூட ஒரு முதலமைச்சர் வந்த கூட்டத்திற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!