இராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பாக மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் மற்றும் மாவட்ட ஆளுமை குழுக் கூட்டம் குழுவின் தலைவரான ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கா.நவாஸ்கனி
தலைமையில் நடைபெற்றது. குழு உறுப்பினர் செயலரான மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் முன்னிலை வகித்தார். குழு உறுப்பினர் எஸ்.பாண்டி எம்எல்ஏ., பங்கேற்றார்.இக்கூட்டத்தில் நடப்பு நிதியாண்டில் இது நாள் வரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், பாரதப் பிரதமர் குடியிருப்புத் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தூய்மை பாரத இயக்கம், தேசிய ஊரக குடிநீர் திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் பல்வேறு திட்டப் பணிகளுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள செலவினங்கள், நிறைவேற்றப்பட்டுள்ள திட்டப்பணிகள், நிலுவையில் உள்ள திட்டப்பணிகள் ஆகியவை குறித்து, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் நிர்வாக வரவு, செலவு விவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு ஆளுமைக் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டது.இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர், (ஊரக வளர்ச்சி) மா.பிரதீப்குமார், மாவட்ட ஊராட்சித் தலைவர் உ.திசைவீரன், மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, திட்ட இயக்குநர் பாலசுப்ரமணியன், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் திருமதி.சிவராணி, ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர்கள் மற்றும் அரசுத்துறைஅலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு மற்றும் ஆளுமை குழுக் கூட்டம்
எழுதியவர்: mohan March 14, 2020, 4:58 pm




You must be logged in to post a comment.