17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குஞ்சார்வலசையில் குற்றங்களை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி

குஞ்சார்வலசையில் குற்றங்களை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி

எழுதியவர்: mohan March 14, 2020, 4:31 pm

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியத்தில் 28 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் மண்டபம் அருகேயுள்ள வேதாளை ஊராட்சிக்கு உட்பட்ட குஞ்சார்வலசையில், இரவு வேளையில் பல்வேறு சமூக விரோத செயல்கள், குற்றங்கள் அதிகரித்து வருவதாக பெண்கள் குற்றம் சாட்டி வந்தனர். இது குறித்து கிராம பொதுமக்கள் ராமேஸ்வரம் காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷிடம் நேரில் மனு அளித்தனர். அவரது ஆலோசனைபடி குஞ்சார்வலசை கிராமத்தில் கேமராக்கள் பொருத்தி சமூக விரோத செயல்களை கண்காணித்து போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்க கர்ம வீரர் காமராஜர் உதவும் கரங்கள் மற்றும் பொதுமக்கள சார்பில் முடிவெடுக்கப்பட்டது. இதன்படி குஞ்சார்வலசை கிராமத்தில் 12 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் விழா நடந்தது. ராமேஸ்வரம் காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் தொடங்கி வைத்தார். கிராமத் தலைவர் பொன்னுச்சாமி தலைமை வகித்தார். மண்டபம் காவல் சார்பு ஆய்வாளர் சிராஜ்தீன், தலைமை ஆசிரியை லதா ஆகியோர் பேசினர். ஊராட்சி துணை தலைவர் சந்திரகலா, ஊராட்சி முன்னாள் துணை தலைவர் அசுபதி, ஊராட்சி உறுப்பினர்கள் ஜெயபிரகாஷ், கணேசன், முன்னாள் உறுப்பினர் ஜெயக்குமார், ,கர்ம வீரர் காமராஜர் உதவும் கரங்கள் சார்பில் எஸ்.ஜம்பு கேசவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!