17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற நேர்மையாக உழைக்க வேண்டும்- தென்காசி மாவட்ட ஆட்சியர்

மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற நேர்மையாக உழைக்க வேண்டும்- தென்காசி மாவட்ட ஆட்சியர்

எழுதியவர்: mohan March 14, 2020, 4:09 pm

தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜர் அரசு கல்லூரியின் விளையாட்டு விழா, மகளிர் தின விழா, ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா கல்லூரிக்கான கனி வேலவன் கலையரங்கத்தில் நடைபெற்றது.விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஜெயா தலைமை வகித்தார். பேராசிரியர் வீரபத்திரன் வரவேற்று பேசினார். தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன், எஸ்பி சுகுணா சிங் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழா பேரூரை நிகழ்த்தினர்.சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர். விழாவில் சிறப்புரையாற்றிய மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் பேசியதாவது:- அரசு கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள் பல்வேறு துறைகளில் சாதிக்க வேண்டும் எனவும்,கணினி மற்றும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி சிறந்த முன்னேற்றம் அடைய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும், இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற கருத்து எழுகிறது. படிப்பதனால் வேலை கிடைக்குமா வருவாய் வருமா என்றெல்லாம் நினைக்கின்றனர். சிகரத்திற்கு அருகே வரும் மாணவர்கள் சிகரத்தை தொட கடின உழைப்பும், இடைவிடாத முயற்சியும், நேர்மையும், போராடும் குணமும், நேர்மறை சிந்தனையும், திரும்ப திரும்ப முயற்சித்தும் துவண்டு விடாது செயல்படுதல், கூட்டு முயற்சி ஆகியவையே வெற்றியை கொண்டு வரும் என்று கூறிய மாவட்ட ஆட்சியர், மாணவர் பருவம் அதிலும் கல்லூரி மாணவர் பருவம் வாழ்க்கையில் கிடைத்த சிறந்த வாய்ப்பு. ஆகவே கல்லூரி மாணவர்கள் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என பேசினார்.ல் சிவகுருநாதபுரம் இந்து நாடார் மகமை கமிட்டி நிர்வாகிகள், வீகே புதூர் தாசில்தார் ஹரிஹரன், சகோதரி சண்முகசுந்தரம், வழக்கறிஞர்கள் மாடக்கன்னு, செந்தூர் பாண்டியன், வெனிஸ்குமார், உடற்கல்வி ஹமர்நிஷா, எஸ்ஐ நித்யா, மாற்றுத்திறனாளிகள் கபாடி அணி மகேஷ், பேராசிரியர்கள் பரமார்த்தலிங்கம், அஜித், பழனிச்செல்வம், நாராயணன், மாரிப்பாண்டி, மனோரஞ்சிதம், மோகனகண்ணன், செல்வகணபதி, உமயபார்வதி, உடற்கல்வி இயக்குனர்கள் மதியழகன், ஸ்டெல்லா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!