17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முகம்மது சதக் ஹமீது கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாமாண்டு கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா..

முகம்மது சதக் ஹமீது கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாமாண்டு கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா..

எழுதியவர்: ஆசிரியர் March 14, 2020, 3:41 pm

முகம்மது சதக் ஹமீது கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாமாண்டு கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா இன்று (14/03/2020) காலை 10.00 மணியளவில்  நடைப்பெற்றது.

இந்நிகழ்வை கல்லூரி முதல்வர் Dr.A.R.நாதிரா பானு கமால்  அனைவரையும் வரவேற்றும், கல்லூரி ஆண்டு அறிக்கை வாசித்தும் தலைமை உரையாற்றினார். சிறப்பு விருந்தினர் Dr.R. பாஸ்கரன், மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர், மதுரை மண்டலம், மதுரை கல்லூரியில் நடைப்பெற்ற பல்வேறு போட்டிகளிலும், விளையாட்டிலும் வெற்றிப் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கினார். அவர் பேசுகையில், கல்லூரியின் ஆண்டு அறிக்கையின் மூலமாக கல்லூரியின் முன்னேற்றத்தை வாழ்த்தினார். கல்வியாளராகவும், சார்ந்து வாழும் நிலையிலிருந்து மாறி சொந்த உழைப்பில் வாழ்ந்து முன்னேற வேண்டும் என்றும் அன்பு, அறம் சார்ந்து வாழ வேண்டும் என்றும், எண்ணத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் எண்ணங்களை தூய்மையாக இருந்தால் வாழ்வு, குடும்பம், சமுதாயம், நாடு செம்மையாக மாறும் என்றும் சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் Dr.முகம்மது ஜகுபர், முகம்மது சதக் பொறியியல் கல்லூரி டீன், ஆலியா முகம்மது சதக் CBSC பள்ளி முதல்வர் ஆகியோர் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் கல்லூரியின் பேராசிரியர்கள், அலுவலக உதவி ஆய்வாளர்கள், காவலாளிகள், ஓட்டுனர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வை கல்லூரி பேராசிரியர்கள், பணியாளர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர். நிகழ்ச்சிக்கு முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் S.M.முகம்மது யூசுப், செயலாளர் S.M.H.சர்மிளா, கல்லூரி இயக்குநர் P.R.L.S.ஹமீது இப்ராகிம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!