18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே வடுகப்பட்டியில் விவசாய தோட்டத்தில் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டுபன்றிகளை தடுக்க வனத்துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை.

உசிலம்பட்டி அருகே வடுகப்பட்டியில் விவசாய தோட்டத்தில் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டுபன்றிகளை தடுக்க வனத்துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை.

எழுதியவர்: mohan March 14, 2020, 12:03 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வடுகப்பட்டி பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பருத்தி, நிலக்கடலை, சோளம் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் வடுகப்பட்டி கிராமத்திற்கு அருகில் புத்தூர் மலைஅடிவாரத்திலிந்து சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு வழக்கம் போல் காட்டுப்பன்றிகள் நிலங்களை சேதப்படுத்தியது. அதிலிருந்த ஒரு காட்டுபன்றியின் குட்டி மட்டும் வழிதவறி கிணற்றுக்குள் விழுந்தது. அதனை பார்த்த விவசாயி அழகத்தேவர் வனத்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். அங்கு விரைந்த வனத்துறையினர் கிணற்றுக்குள் உயிருடன் இருக்கும் காட்டுப்பன்றிக்குட்டியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.பின்னர் சுமார் அரைமணி நேரம் போராடி அந்த பன்றிக்குட்டியை சாக்குப்பையால் உயிருடன் மீட்டு பத்திரமாக எடுத்துசெல்லப்பட்டு வனப்பகுதிக்குள் விட்டனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!