17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் அருகில் 93 பவுன் நகை மற்றும் ரூ 2 லட்சம் பணம் கொள்ளை

திருப்பரங்குன்றம் அருகில் 93 பவுன் நகை மற்றும் ரூ 2 லட்சம் பணம் கொள்ளை

எழுதியவர்: mohan March 14, 2020, 10:06 am

திருப்பரங்குன்றம் அருகில் உள்ளது தனக்கன்குளம் பர்மா காலணி. இங்கு வசிப்பவர் பார்வதிதேவி (45). இவர் திருநகரில் பெயிண்ட் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில்  வீட்டின் கதவை பூட்டி விட்டு பெயிண்ட் கடைக்கு சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 93 பவுன் நகை மற்றும் 2 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து பார்வதி ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் ஆகியோர் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் சுமார் 30 லட்சம் மதிப்பள்ள நகை, பணம் கொள்ளை போன சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!