17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி கண்மாயில் கோழி கழிவுகள் கொட்டப்பட்டால் நடவடிக்கை..நகராட்சி எச்சாிக்கை.

உசிலம்பட்டி கண்மாயில் கோழி கழிவுகள் கொட்டப்பட்டால் நடவடிக்கை..நகராட்சி எச்சாிக்கை.

எழுதியவர்: mohan March 14, 2020, 9:52 am

உசிலம்பட்டி கண்மாய் கரையில் கோழி கழிவுகள் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்பட்டு மிக அசுத்தமான நிலையில் காணப்பட்டது. இதுகுறித்து ஆர்டிஓ ராஜ்குமாா்  மற்றும் நகராட்சி ஆணையாளர் அழகேஸ்வாி (பொறுப்பு) இடம் புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து  நகராட்சி சார்பாக சுகாதாரத்துறை அதிகாாிகள் அகமது கபீா் சரவணப்பிரபு மேற்பாா்வையில் பணியாளா்கள் கோழி கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக ஈடுபட்டனா்..

மேலும் உசிலம்பட்டிக்கு நீராதாரமாக விளங்கும் உசிலம்பட்டி கண்மாயை அசுத்த படுத்துவோர் குப்பைகள் மற்றும் கோழி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது அபராதமும் தகுந்த நடவடிக்கையும் எடுக்கப்படும் என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!