18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய கிராம மக்கள்

ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய கிராம மக்கள்

எழுதியவர்: mohan March 14, 2020, 9:23 am

தங்கள் வீட்டில் பிறந்த பெண் குழந்தைகளின் வளர்ச்சிக்காக சீர்வரிசை வழங்குவது போல், தங்கள் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியின் வளர்ச்சிக்காக சீர்வரிசை பொருட்களை ஊர்வலமாக கொண்டு வந்து பள்ளிக்காக வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்திய கிராம மக்கள்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சுளிஒச்சான்பட்டி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியின் 12 வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது.2007 ஆம் ஆண்டு முதல் ஆரம்ப்பள்ளியாக துவங்கி பள்ளியின் வளர்ச்சி மூலம் அடுத்தடுத்து உயர்நிலைப்பள்ளியாக கடந்த 2012ஆம் ஆண்டு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.உயர்நிலைப்பள்ளியாக மாறியது முதல் கடந்த ஏழு ஆண்டுகளாக இப்பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளின் தேர்ச்சி விகிதம் தொடர்ந்து 100 சதவீதமாக உள்ளதாக கூறப்படுகிறது.

மாணவ மாணவிகள் மத்தியிலும் கிராம மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ள இந்த பள்ளியின் 12வது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த சுளிஒச்சான்பட்டி, லிங்கப்பநாயக்கணூர், திம்மநத்தம் பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் இப்பள்ளியின் வளர்ச்சிக்காக சுமார் 50 ஆயிரம் மதிப்பீட்டில் பள்ளிக்கு தேவையான சேர், நாற்காலி, மின்விசிறி, குடம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பரிசாக வழங்கியுள்ளனர்.இந்த பொருட்களை கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்து வந்து சீர்வரிசை கொடுப்பது போல பள்ளி தலைமையாசிரியரிடம் வழங்கினர்.மேலும் தங்கள் வீட்டில் பிறந்த பெண் குழந்தைகளின் வளர்ச்சிக்காக சீர்வரிசை கொடுப்பது போல் எங்கள் பள்ளியின் வளர்ச்சிக்கு சீர்வரிசை வழங்கியுள்ளோம் என கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!