இராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரத்தைச் சேர்ந்தவர் அங்குசாமி. இவரது மகன் நாகநாதன், சவூதி அரேபியாவில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவர்.நாகநாதன் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய உதவுமாறு, அங்குசாமி குடும்பத்தார் வேண்டுகோள் விடுத்தனர். இதனை ஏற்று, நாகநாதன் உடலை தாயகம் அனுப்புவதற்கான சவூதி அரசு சார்ந்த
நடவடிக்கைகளை தமுமுக சமூகநலத்துறை ரியாத் மண்டல செயலாளர் அப்துல் ஹமீது, தமுமுக மாநில செயலாளர் சலிமுல்லாஹ்கானை தொடர்பு கொண்டார் .விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த நாகநாதன் உடலைதிருச்சி தமுமுக நிர்வாகிகள் பெற்று கொண்டு, இராமநாதபுரம் தமுமுக ஆம்புலன்ஸில் ரெகுநாதபுரம் அனுப்பினர். நாகநாதன் உடலுடன், தமுமுக., மாநில மீனவரணி துணைச் செயலாளர் சரீப், மாவட்ட துணை செயலாளர் மேலப்புதுக்குடி ரைஸ் இப்ராஹிம், மாவட்ட துணை செயலாளர் சாகுல்ஹமீது, தமுமுக ஊடக பிரிவு செயலாளர் யாசர்அரபாத், காதர்ஷா அல்தாப், சதாம் உசேன், சுஜாதுல்லாஹ் ஆகியோர் ரெகுநாதபுரம் சென்று அங்குசாமி குடும்பத்தாரிடம் நாகநாதன் உடலை நல்லடக்கம் செய்ய ஒப்படைத்தனர். மதம் கடந்த தமுமுக., வின்மத நல்லிணக்க சேவையை ரெகுநாதபுரம் மக்கள் நன்றி பாராட்டினர் எனஇராமநாதபுரம் மாவட்ட சிறு வியாபாரிகள் சங்கத் தலைவர் என்.ராம மூர்த்தி தெரிவித்தார் .
இந்து சகோதரர் உடல் அடக்கத்திற்கு உதவிய முஸ்லிம்கள்
எழுதியவர்: mohan March 14, 2020, 8:59 am




You must be logged in to post a comment.