17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொதுநல சங்க மாவட்ட மாநாடு

இராமநாதபுரத்தில் தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொதுநல சங்க மாவட்ட மாநாடு

எழுதியவர்: mohan March 14, 2020, 8:54 am

தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் இராமநாதபுரம் மாவட்ட மாநாடு நடந்தது. மாவட்ட தலைவர் எஸ். கருணாநிதி தலைமை வகித்தார். மாவட்ட செயலர் டி.ராமமூர்த்தி வரவேற்றார். பி.ராமநாதன், சி. கார்த்திகை ராஜ், ஐ.விக்ரமாதித்தன் (திருப்புல்லாணி), பி.மணிகண்டன்(ரெகுநாதபுரம் முன்னிலை வகித்தனர். தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் அசோசியேஷன் நிறுவன தலைவரும், சைமா தலைவருமான பி. சகிலன், சிறப்புரையாற்றினார். மாநில தலைவர் பி.ஆர்.தணிகை வேல், மாநில பொதுச்செயலர் எம்.வீரமுத்து, மாநில பொருளாளர் எஸ்.வெள்ளைச்சாமி, அறக்கட்டளை நிறுவனர் டி.ஆறுமுகம் உள்ளிட்டோர் பேசினர். சமீபத்தில் இறந்த திருவாடானையைச் கேபிள் டிவி ஆபரேட்டர் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கினர். தொழில் முன்னேற்றம் , கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு அரசிடம் முன் வைக்க வேண்டிய கோரிக்கைகள் தொடர்பாக மார்ச் 27ல் தஞ்சை மாநில மாநாடு நடத்துவதென இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.இராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக கருணாநிதி, மாவட்ட தலைவராக மேகராஜன் (முதுகுளத்தூர்), மாவட்ட செயலர்களாக ராமமூர்த்தி, மாவட்ட பொருளாளராக கார்த்தி, துணை தலைவர்களாக பூப்பாண்டியன் (சாயல்குடி), ரமேஷ் (உச்சிப்புளி), தேன்மொழி (கீழக்கரை), சரவணன், சாதிக் (திருவாடானை), துணை செயலர்களாக ராமர் (கமுதி), பஞ்சு, முருகானந்தம் (கீழக்கரை), காளிதாஸ் (திருவாடானை), ராமநாதன் (ராமநாதபுரம்), செயற்குழு உறுப்பினர்களாக ரவி (ராமநாதபுரம்), கார்மேகம், சிவா (சாயல்குடி), பாலசுப்ரமணியன் (கடலாடி), வரதராஜன்(சாயல்குடி), மோகன்ராஜ் (செல்வ விநாயகபுரம்), தமிழ்வாணன் (பரமக்குடி), பஷீர் அஹமது (சிக்கல்), செந்தில்குமார் (திருவாடானை), முத்தமிழன் (திருவாடானை), கே.செந்தில்குமார் (திருவாடானை), செழியன் (பரமக்குடி) ஆகியோர் புதிய நிர்வாகிகளாக போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!