17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆர்ப்பாட்டம்..

இராமநாதபுரத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆர்ப்பாட்டம்..

எழுதியவர்: mohan March 14, 2020, 8:50 am

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து டில்லியில் நடந்த போராட்டத்தில் போலீஸ் தாக்குதலில் பாதித்த மக்களுக்கு சட்ட ரீதியாக உதவி செய்த பாப்புலர் பிரன்ட் நிர்வாகிகள் மற்றும் முஸ்லிம்களை கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா சார்பாக இராமநாதபுரம் அரசு பணி மனை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் மன்சூர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் இப்ராஹிம், எஸ்டிபிஐ., கட்சி மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன், பொதுச்செயலாளர் பரக்கத்துல்லாஹ், செயலாளர் முஹம்மது இஸ்ஹாக் முன்னிலை வகித்தனர்.ரினோஸ் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹமீத் இப்ராஹிம் கண்டன உரை ஆற்றினார். விதைகள் கலைக்குழு சார்பில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. நகர் தலைவர் முஹம்மது இபுராஹிம் நன்றியுரை கூறினார். பாப்புலர் பிரன்ட் நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் எஸ்டிபிஐ., நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள், சமூக ஆர்வலர்கள் பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!