17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியின் இயற்பியல் துறை ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியின் இயற்பியல் துறை ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

எழுதியவர்: mohan March 14, 2020, 8:39 am

திருச்சி மாவட்டம் புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் இயற்பியல் துறை ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. முதுகலை இரண்டாமாண்டு இயற்பியல் மாணவி நித்யா வரவேற்புரை வழங்கினார். இயற்பியல் துறை உதவி பேராசிரியர் குமரவேல் துறையின் ஆண்டறிக்கை வாசித்தார். அதில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது, தேசிய அறிவியல் தினத்தை கொண்டாடியது, மாணவர்கள் ராக்கெட் மாதிரி செய்து கோபி கல்லூரியில் நடைபெற்ற இஸ்ரோவின் தேசிய அளவிலான கண்காட்சியில் பங்கு பெற்றது, இயற்பியல் உதவிப்பேராசிரியர் இரமேஷ் உடன் 5 மாணவர்கள் பெங்களூர் பல்கலைக்கழகத்தில் அறிவியல் ஆராய்ச்சி சமர்ப்பித்தது, ஆந்திர மாநிலம் விஜய நகரம் அருகே வீட்டில் நடைபெற்றதங்களுடைய அறிவியல் ஆராய்ச்சி சமர்ப்பித்தது, மேலும் விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சி அனைத்திலும் சிறந்து விளங்கியதை சுட்டிக்காட்டினார். கல்லூரி முதல்வர் முனைவர் பொன் பெரியசாமி தலைமை உரை ஆற்றினார். அதில் மாணவர்கள் அடிப்படை அறிவியல் பயில வேண்டும், நெட் தேர்வில் அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும், நிறைய தொழில் பயிற்சி செல்ல வேண்டும் என்று பேசினார். மேலும் இயற்பியல் ஆராய்ச்சித் துறை ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் அரசு நிதியுதவி பெற்றுள்ளதை சுட்டிக்காட்டினார்.

கல்லூரித் தலைவர் பொன் பாலசுப்பிரமணியம் சிறப்புரையாற்றினார். அதில் இயற்பியல் துறை கல்லூரியிலேயே சிறந்து விளங்குவதாகவும், ஆராய்ச்சியில் அறிவியல் துறை மாணவர்கள் சிறப்பாக செயல்படுவதாக கூறினார். கல்லூரியில் முதுகலை படிக்கும் மாணவர்கள் கல்லூரி வளாகத்திலேயே கணினி ஆய்வக வசதியை வேலை செய்து படிக்க வசதி உள்ளதாக கூறினார். மேலும் சாதனை புரிந்த ஆசிரியர் மற்றும் மாணவர்களை வாழ்த்தி பேசினார்.

சுயநிதி பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனைவர் மீனாட்சிசுந்தரம் மற்றும் சுயநிதி பிரிவு இயற்பியல் துறை தலைவர் கபிலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.இயற்பியல் துறை உதவி பேராசிரியை செல்வி பாக்கியலட்சுமி நன்றி உரை கூறினார். நிகழ்ச்சியில் 300கும் மேற்பட்ட இயற்பியல்துறை மாணவ மாணவிகள் பங்கு பெற்றனர்.

செய்தி: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!