இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே பெருவயல்-பூந்தோண்டி பகுதியில் சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுகிறது. இது குறித்து தேவிபட்டினம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயகாந்தன் போலீசில் புகார் அளித்தார். இதனடிப்படையில், இளங்குளம் காமாட்சி மகன் கார்த்திகேயன் (எ) போஸ், கலையனூர் செல்வம் மகன் நாகராஜன் ஆகியோரை தேவிபட்டினம் போலீசார் நேற்று (மார்ச் 12) மாலை விசாரணைக்காக அழைத்து சென்றனர். போலீசார் தாக்கியதில் படுகாயமடைந்த போஸ், ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் முதலுதவிக்கு பிறகு, மதுரையில் மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். போஸ் மரணத்திற்கு உரிய நீதி விசாரணை கோரியும், போலீசாரை கண்டித்து போஸ் உறவினர்கள் தேவிபட்டினம் – திருச்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு ள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் இராமநாதபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் வெள்ளைத்துரை சமரசம் பேசி வருகிறார். இதனால் திருச்சி சாலையில் போக்குவரத்து பாதித்துள்ளது.






You must be logged in to post a comment.