17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பொய் வழக்குகளை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்..

பொய் வழக்குகளை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் March 13, 2020, 8:25 pm

டெல்லி வன்முறையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தொடர்புபடுத்தி குறிப்பிட்ட ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளை தொடர்ந்து டெல்லி காவல்துறை பாரபட்சமாக டெல்லி மாநில நிர்வாகிகளை புனையப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் கைது செய்ததை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக இன்று 13/03/2020 (வெள்ளிக்கிழமை ) மதுரை நெல்பேட்டை அண்ணாசிலை அருகில் மதியம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் SM.முஹம்மது அபுதாஹிர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கு கண்டன உரை நிகழ்த்த சிறப்பு அழைப்பாளராக சென்னை மண்டல தலைவர் ஆபிருத்தீன் மன்பஈ அவர்கள் பங்கேற்றார்.

மேலும் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மதுரை மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவர் SA. லியாக்கத்லியாக்கத் அலி மற்றும் செயலாளர் காஜா மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!