18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விஷம் அருந்தி மயங்கி இளைஞர் பலி

விஷம் அருந்தி மயங்கி இளைஞர் பலி

எழுதியவர்: mohan March 13, 2020, 7:46 pm

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயில் செல்லும் வழியில் உள்ள ஆர்ச் அருகே  ஒரு இளைஞர் வாயில் நுரை தள்ளி படிய மயங்கி கீழே விழுந்தார். அப்பொழுது போக்குவரத்து சீர் செய்யும் பணியில் இருந்த போக்குவரத்து காவலர் துணை ஆய்வாளர்  மோகன் மற்றும் ரவி  அந்த இளைஞருக்கு முதலுதவி அளித்தனர். உதவிக்கு அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்த பாலு என்பவரும் வலிப்பு ஏற்பட்டதால் மயங்கி விழுந்து இருக்கலாம் என நினைத்து இரும்பு சாவியை கையில் கொடுத்து உள்ளனர். எனினும் அவர் வாயில் நுரை தள்ளி வெளியே இருந்தார். பின் துரிதமாக செயல்பட்ட போக்குவரத்து காவல்துறை துணை ஆய்வாளர்கள் 108 அவசர கால ஊர்தி தகவல் கொடுக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  108 வாகனம் அவரை திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் கொண்டுசெல்லப்பட்டார். எனினும் அவர் மரணமடைந்தார். பின் அவரை பரிசோதித்த மருத்துவர் இவர் விஷமருந்தி இறந்திருக்கலாம் எனவும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் யார் என விசாரித்தபோது மதுரை ஆரப்பாளையத்தில் சேர்ந்த செந்தில்குமார்  34 என தெரியவந்தது. உடலை கைப்பற்றிய திருப்பரங்குன்றம் காவல்துறையினர் உடலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த குடும்ப பிரச்சினைக்காக விஷயமறிந்த நாரா இல்ல வேறு ஏதும் காரணமா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!