17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் தேசிய கருத்துப்பட்டறை

கீழக்கரை தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் தேசிய கருத்துப்பட்டறை

எழுதியவர்: mohan March 13, 2020, 7:10 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பில் மாணவியருக்கான ஒரு நாள் தேசிய கருத்துப்பட்டறை கல்லூரியில்  நடைபெற்றது. பி.ஏ., இரண்டாம் ஆண்டு வணிக மேலாண்மையியல் மாணவி வஃபா அப்துல் கஃபார் வரவேற்றார். அமர்வுத் தலைவரை கௌரவித்து கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.சுமையா தொடக்கவுரையாற்றினார். திருச்சி மூத்த பிரிவு மேலாளர் முனைவர் கே.பிரபாகரன்,அமர்வு தலைவராக கலந்து கொண்டு நிலையான நுகர்வோர் குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். நுகர்வோர் சார்பில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. , பி.ஏ., மூன்றாமாண்டு வணிகவியல் மற்றும் கணிணி பயன்பாட்டியல் மாணவி மு.மு.ஹைருன் ஹபிலா நன்றி கூறினார். கருத்துப்பட்டறைக்கான ஏற்பாடுகளை வணிகவியல் மற்றும் வணிக மேலாண்மையியல் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!