17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேல் பெண்ணாத்தூர் அரசு பள்ளியில் கொரனோ வைரஸ் குறித்து விழிப்புணர்வு முகாம்…

மேல் பெண்ணாத்தூர் அரசு பள்ளியில் கொரனோ வைரஸ் குறித்து விழிப்புணர்வு முகாம்…

எழுதியவர்: Askar March 13, 2020, 7:10 pm

மேல் பெண்ணாத்தூர் அரசு பள்ளியில் கொரனோ வைரஸ் குறித்து விழிப்புணர்வு முகாம்…

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கொரானோ வைரஸ் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் இரா. ஜெயந்தி தலைமை தாங்கினார் .பள்ளி ஆசிரியர் வேல்முருகன் அனைவரையும் வரவேற்று பேசினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கண்டபிள்ளை முன்னிலை வகித்தார். குரானா வைரஸ் குறித்த விழிப்புணர்வு முகாம் முகாமில் ஆயுர்வேத மருத்துவர் புனிதா விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கை கழுவும் முறை நோய் தொற்றாமல் பாதுகாக்கும் முறையும் முகாமில் விளக்கப்பட்டது. நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் சங்கீதா , நாராயணன், அரசு, மகேஸ்வரி, ஆறுமுகம், ராஜா மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர் . முடிவில் பள்ளி ஆசிரியர் தனலட்சுமி நன்றி கூறினார்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!