17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் அரசு கல்லூரியில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா

இராமநாதபுரம் அரசு கல்லூரியில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா

எழுதியவர்: mohan March 13, 2020, 1:02 pm

இராமநாதபுரம் சேதுபதி அரசு கலை கல்லூரியில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துற சார்பில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழாமாவட்ட ஆட்சித் தலைவர்ர் கொ.வீர ராகவ ராவ்தலைமையில் நடைபெற்றது. நடைபெற்றது.அவர் பேசியதாவது:நுகர்வோர் வாங்கும் அனைத்து பொருட்களை த நிர்ணயிக்கப்பட்ட விலையில் மட்டுமே வாங்க வேண்டும். சரியான விலையில் தரமான பொருட்களை பெற்று பயனடைவது நுகர்வோர்களின் உரிமை. உணவுப்பொருட்களை வாங்கும்போது அப்பொருளின் உற்பத்தி நாள், காலாவதி நாள்குறித்த விபரங்களை சரி பார்த்து உறுதி செய்ய வேண்டும். கூடுதல் விலை, தரமற்ற பொருட்களை விற்பனை செய்தல் போன்ற நுகர்வோர் உரிமை மீறல் தொடர்பாக புகார் செய்து சட்டத் தீர்வு காணலாம். இவ்வாறு அவர் பேசினார். தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கினார்.மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் எஸ்.கிறிஸ்டோபர் ஜெயராஜ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் கே.மோகன், சேதுபதி அரசு கலைக்கல்லூரி முதல்வர் க.மகுதம்மாள், பொதுவிநியோகத் திட்ட துணைப்பதிவாளர் ஆர்.ராஜவேலன் உட்பட நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கங்களைச் சார்ந்த பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!