17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லை சேவியர்ஸ் கல்லூரியில் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு காவலன் செயலி விழிப்புணர்வு நிகழ்ச்சி-கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு..

நெல்லை சேவியர்ஸ் கல்லூரியில் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு காவலன் செயலி விழிப்புணர்வு நிகழ்ச்சி-கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு..

எழுதியவர்: Askar March 13, 2020, 9:37 am

நெல்லை சேவியர்ஸ் கல்லூரியில் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு காவலன் செயலி விழிப்புணர்வு நிகழ்ச்சி-கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு..

“சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு” திருநெல்வேலி பாளையங்கோட்டை செயின்ட் சேவியர்ஸ் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மாநகர காவல்துறை சார்பாக காவலன் SOS செயலி பற்றிய விளக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் ச.சரவணன் (சட்டம் & ஒழுங்கு) கலந்து கொண்டு காவலன் செயலியின் பயன்பாடுகள் குறித்த விழ்ப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உரை நிகழ்த்தினார்.

இதில் செயலியை எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும் ,எப்படி கையாள வேண்டும் என்ற முறையையும் தெளிவுபடுத்தினார். மேலும் அவர் கூறுகையில்,நீங்கள் அறிந்ததை உங்கள்குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். மூத்த குடிமக்களின் பாதுகாப்பை காவலன் செயலி மூலம் உறுதி செய்யலாம். காவலன் செயலி எப்போதும் உங்களுடன் இருக்கும் காவல்காரன் எனவும், மாநகர காவல் துறையின் தூதுவர்களாக மாணவ மாணவிகள் செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

மேலும்,உங்கள் படிப்பு வேலை போன்ற லட்சியங்களை எட்ட தடையாக உள்ளதை காவல்துறை உதவியுடன் எதிர் கொள்ளுங்கள் என்ற தன்னம்பிக்கை தூண்டும் வகையில் உரையாற்றினார். இந்நிகழ்வில் கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு காவலன் செயலி பயன்படுத்தும் முறைகள் குறித்து அறிந்து கொண்டனர்.

இந்த காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பத்ம நாப கமல் ( நிர்வாகி-The Consultanzy) மற்றும் சிறுவர் உதவிப் பிரிவு ஆய்வாளர் எழிலரசி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!