18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் ஷேர் ஆட்டோக்களின் கவனக்குறைவால் தொடரும் விபத்து… மாணவன் பலி… பதற வைக்கும் சிசிடிவி காட்சி..

மதுரையில் ஷேர் ஆட்டோக்களின் கவனக்குறைவால் தொடரும் விபத்து… மாணவன் பலி… பதற வைக்கும் சிசிடிவி காட்சி..

எழுதியவர்: ஆசிரியர் March 12, 2020, 9:10 pm

மதுரை மாநகரில் ஒரு நாளுக்கு நாள் பெருகி வரும் ஷேர் ஆட்டோவில் விபத்துக்களும்  குறைந்தாலும், ஷேர் ஆட்டோக்களின் கவனக்குறைவு தொடர்ந்த வண்ணமே உள்ளது.

IMG_8433

நேற்று (11/03/2020) மதுரை தல்லாகுளத்தில் சேர்ந்த பிரகாஷ் என்பவரின் மகன் கார்த்திகேயன் வயது 19  தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் புதன்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்றமொழுது வில்லாபுரம் பகுதியில் இருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த பொழுது, இடது புறமாக ஏறி வந்த ஆட்டோவினால், வலது புறமாக வந்த குப்பை லாரி மோதியதில் கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே உயிலிழந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி உள்ள விபத்து வீடியோ பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இச்சம்பவத்திற்கை பிறகாவது ஷேர்  ஆட்டோக்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் முயற்சி செய்ய வேண்டும் என்பது சமூக ஆர்வலரின் கோரிக்கையாக உள்ளது.

 செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!