மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கதேவர் கல்லூரியில் மகளிர் தினவிழாவை முன்னிட்டு பெண்கள் பாதுகாப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் உசிலம்பட்டி நடுவர் நீதிமன்ற நீதிபதி
ராஜேஸ்குமார் கலந்து பெண்களின் பாதுகாப்பு சட்டம் குறித்து மாணவிகளிடையே விளக்கி பேசினார். அதனைதொடர்ந்து போலிக்காதல் குறித்தும், சார்பதிவாளர் அலுவலகத்தில் போலிப்பதிவு திருமணம் குறித்தும், தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் திரௌபதி திரைப்படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி நிர்வாகம் சார்பில் இலவசமாக மலையாண்டி திரையரங்கில் திரௌபதி திரைப்படம் காண்பிக்கப்பட்டது. இதில் 400க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பார்த்து கண்டுகளித்தனர்.
உசிலம்பட்டியில் போலிக்காதல் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ள திரௌபதி திரைப்படத்தை கல்லூரி மாணவிகளுக்கு திரையரங்களில் இலவசமாக காண்பிக்கப்பட்டது
எழுதியவர்: mohan March 12, 2020, 5:32 pm




You must be logged in to post a comment.