18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செல்லம்பட்டி- கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பது குறித்து ஊராட்சி மன்ற தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம்

செல்லம்பட்டி- கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பது குறித்து ஊராட்சி மன்ற தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம்

எழுதியவர்: mohan March 12, 2020, 1:45 pm

உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பது குறித்து ஊராட்சி மன்ற தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி கிளை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக்கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கவிதாராஜா தலைமைதாங்கினார். இந்த கூட்டத்தில் கோடை காலம் நெருங்கிவரும் நிலையில செல்லம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீரை சிக்கனப்படுத்துவது குறித்தும், குடிநீர் கிடைக்காத கிராமங்களில் வாகனங்கள் மூலம் குடிநீர் வழங்குவது குறித்தும், குடிநீர் கிடைக்காமல் சிரமப்படும் கிராமங்களின் பட்டியலையும் தயாரித்துள்ளதாகவும், அந்த கிராமங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கபட்டது. இதில் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் பாண்டி மற்றும் அனைத்துபகுதி ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத்தலைவர்கள், ஊராட்சி கிளைச்செயலாளர்கள் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!