உசிலம்பட்டி அருகே தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மின்மோட்டார் பட்டனை அழுத்திய போது மின்சாரம் தாக்கி விவசாயி பலி.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருகப்பிள்ளை கிராமத்தைச் சேர்ந்த பரமசாமிதேவர் மகன்
அன்பு(55). விவசாயியான இவர் தனது தோட்டத்தில் உள்ள பூச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச மின்மோட்டார் அறையில் பட்டனை அழுத்தும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவடத்திலேயே பலியானார். உடனே அக்கம்பக்கத்தினர் வாலாந்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்த வாலாந்தூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வாலாந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
உசிலம்பட்டி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி.
எழுதியவர்: mohan March 12, 2020, 1:31 pm




You must be logged in to post a comment.