17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சிறப்பு சுற்றுலா பேருந்து இயக்கம் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அட்டை வழங்கும் விழா

சிறப்பு சுற்றுலா பேருந்து இயக்கம் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அட்டை வழங்கும் விழா

எழுதியவர்: mohan March 12, 2020, 12:35 pm

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை மண்டலம் சார்பாக பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளவும் மற்றும் மதுரை உள்ள முக்கியமான சுற்றுலா தளங்களை குறைந்த கட்டணத்தில் ஒரே நாளில் சுற்றிப்பார்க்க வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக மதுரை மண்டல நிர்வாக இயக்குனர் முருகேசன் அறிவுரையின் பேரில் பொது மேலாளர்  ராஜேஸ்வரன்  மற்றும் துணை பொது மேலாளர்கள் மற்றும் கிளை மேலாளர்கள்  மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் ரூபாய் 125 கட்டணத்தில் மதுரையில் உள்ள முக்கியமான சுற்றுலா தளங்களை ஒரே நாளில் சுற்றிப்பார்க்கும் வகையில் இயக்கப்படும் பேருந்துகளை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இனிப்புகளுடன் பெரியார் பேருந்து நிலைய பகுதியில் பொதுமக்களுக்கு சுற்றுலா பேருந்து இயக்கப்படும் கையேடு உடன் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது  ராஜேஸ்வரன்  பத்திரிகையாளரிடம் கூறும்பொழுது இந்த பேருந்து ஒரேநாளில் மீனாட்சி அம்மன் கோவில் திருமலை நாயக்கர் மகால் தெப்பகுளம் மற்றும் அழகர்கோவில் காந்தி மியூசியம் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த சுற்றுலா பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார் இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் ஒரேநாளில் சுற்றுலாத் தலங்களுக்கு சென்று வர அரசு போக்குவரத்துக்கழகம் குறைந்த கட்டணத்தில் இயக்கி வருவதாகவும் தகவல் தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!