கொரோனா வைரஸ் தாக்கத்தில் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரி தேசிய மாணவர் படை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.கல்லூரி முதல்வர் முனைவர் க.மகுதம்மாள் தலைமை வகித்தார். கை கழுவுதல், துணி மற்றும் சமையல் பாத்திரங்களை வெயிலில் காயவைத்து பயன்படுத்துதல், வெந்நீர் குடித்தல் ஆகியவை மூலம் கொரோனோ வைரஸ் பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம் என்றார்.கல்லூரி பேராசிரியர்கள் தொடங்கி வைத்த பேரணி அச்சுந்தன்வயல் வரை நடைபெற்றது. கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவது குறித்து பொதுமக்களிடம் தேசிய மாணவர் படையினர் எடுத்துக் கூறினர். பேரணி ஏற்பாடுகளை தேசிய மாணவர் படை அலுவலர் முனைவர் மு.உத்தரச்செல்வம் செய்திருந்தார்.
இராமநாதபுரம் சேதுபதி அரசு கல்லூரியில் கொரோனா விழிப்புணர்வு பேரணி
எழுதியவர்: mohan March 12, 2020, 11:51 am




You must be logged in to post a comment.