17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நாடு முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு: அடுத்தது என்பிஆர்?

நாடு முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு: அடுத்தது என்பிஆர்?

எழுதியவர்: Askar March 12, 2020, 9:46 am

நாடு முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு: அடுத்தது என்பிஆர்?

2021 ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ள நிலையில் முதற்கட்டமாக வீடுகளை கணக்கிடும் பணி குறித்து தமிழக அரசு, அரசிதழில் வெளியிட்டுள்ளது.

2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் தமிழகத்தில், ஜுன் மாதம் தொடங்கி ஜூலை மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல்முறையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் செல்போன் செயலி மூலமாக நடத்தப்பட உள்ளது.

அதில், மக்கள் தொகை கணக்கெடுப்புபணி முதற்கட்டமாக வீடுகளை கணக்கெடுப்பதும், இரண்டாம் கட்டமாக மக்கள் தொகை எண்ணிக்கையை கணக்கெடுப்பும் நடைபெறுகிறது.

அதில், முதற்கட்டமாக வீடுகளை கணக்கெடுக்கும் பணிக்கான விவரங்களை தமிழக அரசு, அரசிதழில் வெளியீட்டுள்ளது.

அதில், மத்திய அரசின் பொதுத்துறை செயலாளர் செந்தில்குமார் வௌியிட்ட அறிவிப்பையொட்டி, தமிழக அரசு இந்த அறிவிப்பை செய்துள்ளது.

அதில், ‘‘அனைவரிடம் இருந்தும் 31 கேள்விகளை கேட்டு விவரங்களை சேகரிக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது. கேள்விகள் வருமாறு:

1. கட்டட எண்

2. சென்சஸ் வீட்டு எண்

3. தரை, சுற்றுச்சுவர், கூரை விவரம்.

4. எதற்காக வீடு பயன்படுத்தப்படுகிறது.

5. வீட்டின் நிலை

6. குடும்ப எண்.

7. குடும்பத்தின் மொத்த உறுப்பினர்கள்.

8. குடும்பத் தலைவரின் பெயர்

9. குடும்பத்தலைவரின் பாலினம்.

10. குடும்பத் தலைவர் எஸ்சி/எஸ்டி அல்லது பிற இனத்தைச் சேர்ந்தவரா?

11. சொந்த வீடா? வாடகை வீடா.

12. வீட்டில் உள்ள அறைகளின் எண்ணிக்கை

13. வீட்டில் திருமணமான ஜோடிகளின் எண்ணிக்கை.

14. குடிநீரின் ஆதாரம்.

15. எந்த வகையில் குடிநீர் பெறப்படுகிறது.

16. வீட்டில் மின் இணைப்பு உள்ளதா இல்லையா?

17. வீட்டில் கழிவறை உள்ளதா?

18. கழிவறையின் வகை என்ன?

19. கழிவு நீர் அகற்றும் வசதி உள்ளதா?

20. குளியல் அறை உள்ளதா?

21. சமையல் அறை மற்றும் சமையல் எரிவாயு உள்ளதா?

22. சமையலுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருள் என்ன?

23. ரேடியா, டிரான்சிஸ்டர் உள்ளதா?

24. டிவி உள்ளதா?

25. இன்டர்நெட் வசதி இருக்கிறதா?

26. லேப்டாப்/கம்ப்யூட்டர் இருக்கிறதா?

27. தொலைபேசி/செல்போன்/ஸ்மார்ட் போன் உள்ளதா?

28. சைக்கிள்/ஸ்கூட்டர்/பைக்/மொபட் உள்ளதா?

29. கார்/ஜீப்/வேன் உள்ளதா?

30. குடும்ப உறுப்பினர்கள் அதிகம் சாப்பிடும் பருப்பு வகை என்ன?

31. செல்போன் எண். ஆகிய 31 கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதைத் தொடர்ந்து மக்கள் தொகை பதிவேட்டுக்கான(என்பிஆர்) விவரங்களை சேகரிக்கும் பணி நடைபெறும்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!