மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 77 வது வார்டு திருப்பரங்குன்றம் பிரதான சாலை பழங்காநத்தம் மத்திய நுகர்பொருள் நுழைவாயில் அருகே இரண்டு இடங்களில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக பல லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் சாலையில் வீணாக செல்கிறது. இதனால் சாலை பழுதாகி இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் ஏற்படும் அவலமும் ஏற்படுகிறது. பலமுறை மாநகராட்சி அதிகாரிகள் அந்தப் பகுதி வழியாக சென்று வருகிறார்களே அவர்கள் கண்களுக்கு தெரியவில்லையா என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். குடிநீர் வீணாக்க வேண்டாம் என பிரச்சாரம் செய்யும் அதிகாரிகள் பல லட்சக்கணக்கான குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது என அக்கறையுடன் பொறுப்புடனும் செயல்பட்டால் வரும் கோடை காலத்தை குடிநீர் பஞ்சம் இல்லாத கோடை காலமாக செய்துவிடலாம் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேதனையுடன் தெரிவிக்கின்றன.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.