17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை அருகே மக்கள் தொடர்பு முகாம்

நிலக்கோட்டை அருகே மக்கள் தொடர்பு முகாம்

எழுதியவர்: mohan March 12, 2020, 9:31 am

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பச்சைமலையான்கோட்டை ஊராட்சி, செம்பட்டியில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மக்கள் தொடர்பு முகாம் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் உஷா தலைமையில் நடைபெற்றது. நிலக்கோட்டை தாசில்தார் யூஜின் வரவேற்று பேசினார். நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ரெஜினாநாயகம், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் யாகப்பன் , பச்ச மலையான் கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் காளிதாஸ் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.மக்கள் தொடர்பு முகாமில் விலையில்லா வீட்டு மனை பட்டா , நில பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, ஆதரவற்ற விதவை சான்று, சூரியசக்தி மின் விளக்குடன் கூடிய பசுமை வீடுகள் , தமிழக முதலமைச்சர் வீட்டு காய்கறிகள் மற்றும் உற்பத்தி திட்டம் வேளாண் பண்ணை கருவிகள் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்டங்களை 61 லட்சத்து 47 ஆயிரத்து 300 ரூபாய் மதிப்புள்ள நலத்திட்டங்களை திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் உஷா பொதுமக்களுக்கு வழங்கி சிறப்புரை ஆற்றினார்.இம்முகாமில் மாவட்ட ஆட்சியரின் ( நேர்முக உதவியாளர் ) சிவக்குமார், தலைமையிட துணை தாசில்தார் ராமசாமி, துணை தாசில்தார் ருக்மணி , வருவாய் ஆய்வாளர் சென்னா கிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!