18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் பாஜக நகர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

இராமநாதபுரம் பாஜக நகர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

எழுதியவர்: mohan March 12, 2020, 9:27 am

இராமநாதபுரம் பாஜக., நகர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட பாஜக., அலுவலகத்தில் ( அரண்மனை வளாகம், தாமரை இல்லம்) நடந்தது. நகர் தலைவர் ஆர்.வீரபாகு தலைமை வகித்தார். நகர் பொதுச்செயலர்கள் பி.நவநீதன், என்.மாரிமுத்து, நகர் துணைத்தலைவர்கள் எஸ்.ராகேஷ் குமார், கே.தர்மராஜ், கே.ஆர்.ஜெகன் பிரசாத், நகர் செயலர்கள் எம்.பூபதிராஜா, ஆர்.வி.சரவணன், நகர் பொருளாளர் டி.கதிரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழக பாஜக., தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் முனைவர் எல்.முருகனுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நகரில் உள்ள 19 பூத்களில் புதிய உறுப்பினர்கள் சேர்த்து கிளை கமிட்டி அமைத்தல், பாஜக., ஸ்பாதக நாளையொட்டி, மார்ச் 20 முதல் ஏப்ரல் 6 வரை இராமநாதபுரம் நகரில் 1,000 டூவீலர் பேரணி நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!