17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இந்தியா எங்கள் தேசம்!இஸ்லாம் எங்கள் சுவாசம்!

இந்தியா எங்கள் தேசம்!இஸ்லாம் எங்கள் சுவாசம்!

எழுதியவர்: Askar March 11, 2020, 11:45 pm

இந்தியா எங்கள்தேசம்! இஸ்லாம் எங்கள்சுவாசம்!

கவிஞர்,கப்ளிசேட்

பகுதி-5

இந்தியாவில்பாசிசம் உருவானதற்கான விதைகளை அறிந்து கொள்வது அவசியம். உலக வரலாறு நெடுகிலும் சர்வாதிகாரிகளும், கொடுங்கோலர்களும் ஆட்சி செய்தே வந்திருக்கிறார்கள்.மக்களை கசக்கிப்பிழியும் சர்வாதிகாரிகளுக்கும், மதங்களின் பெயரால், இனங்களின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் பாசிசவாதிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.சர்வாதிகாரிகளும், பாசிசவாதிகளும் கைகோர்த்தார்கள். ஜெர்மனியிலும்,உலகின் இதர பகுதிகளிலும் மனிதநேயங்களை மீறிய படுகொலைகள் நிகழ்ந்தது. சர்வாதிகாரத்தின் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தையாக இந்தியாவில் பாசிசம் முளைத்தது. RSS நிறுவனர்களில் ஒருவரான பி.எஸ்.மூஞ்சே 1931 ஆம் ஆண்டு பிப்ரவரி,மார்ச் மாதங்களில் ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது இத்தாலியில் பெரும்பகுதியை கழித்த அவர் பாசிஸ்டுகளின் முகாம்களையும், உடற்பயிற்சி கூடங்களையும், பார்வையிட்டார். இளைஞர்களிடம் பாசிச மூளைச் சலவைசெய்யும் இந்நிறுவனங்களின் வழிமுறைகள் மூஞ்சேவின் நெஞ்சில் ஆழப்பதிந்தது. சீருடையுடன் வாராந்திர பயிற்சி வகுப்புகளும், அணி வகுப்புகளும் நடத்தப்பட்டன. பாசிச கருத்தாக்கத்தை மக்களிடையே விதைக்க இதுபோன்ற சீருடை அணிந்த பட்டாளம் இந்து இந்தியாவிற்கு மிகவும் தேவை என்ற கருத்தை நெஞ்சில் பதியவைத்துக்கொண்டார். வெனீசிய அரண்மனையில் மூஞ்சேவை எழுந்து நின்று கைகுலுக்கி வரவேற்றான் முசோலினி. பலில்லா போன்ற இத்தாலியின் பாசிச அமைப்புகளைப்போல, இராணுவகட்டுப்பாட்டுடன் பாசிசத்தை விதைக்க இந்தியாவில் தானும் ஒரு அமைப்பை நிறுவுவேன் என்றார் மூஞ்சே. இத்தாலியில் முசோலினியை சந்தித்து அதன் பாசிச அமைப்புகளை பார்த்து,அதுபோல இந்தியாவில் RSS அமைப்பை ஹெட்கோவருடன் இணைந்து தொடங்கியதை எகனாமிக்கில் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லிஇதழில் மார்கியா கசோலாரி என்ற ஆய்வாளர் (22,ஜனவரி ,2000)இதழில் ஆதாரங்களோடு வெளிப்படுத்தினார். பாசிசத்தின் முழுப்பரிமாணங்களை அறிந்து கொண்டால்தான் அதனை வீழ்த்தும் உத்திகளை வகுக்கமுடியும்.

பாசிசத்தின்வேர்களை தொடந்து பேசுவோம்..!

கப்ளிசேட் 10.03.20

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!