17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் அருகே விவசாயி வீட்டில் 60 பவுன் நகை ரூ.10 லட்சம் கொள்ளை..

செங்கம் அருகே விவசாயி வீட்டில் 60 பவுன் நகை ரூ.10 லட்சம் கொள்ளை..

எழுதியவர்: Askar March 11, 2020, 10:32 pm

செங்கம் அருகே விவசாயி வீட்டில் 60 பவுன் நகை ரூ.10 லட்சம் கொள்ளை..

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு அடுத்த காம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜூனன். இவரது மனைவி படவேட்டம்மாள் (வயது 60). அர்ஜூனன் அவரது மகன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டனர். இதனால் விவசாய பணிகளை செய்து கொண்டு மருமகள் மற்றும் பேத்தியுடன் படவேட்டம்மாள் வசித்து வந்தார்.

நேற்று விவசாய நிலத்தில் அறுவடை நடந்தது. இதனால் நேற்றிரவு வீட்டிற்கு வந்த படவேட்டம்மாள் அசதியில் தூங்கிவிட்டார். நள்ளிரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அறையில் இருந்த 3 பீரோக்களை உடைத்து அதிலிருந்து 60 பவுன் நகைகள் ரூ.10 லட்சத்தை திருடி சென்றுள்ளனர்.

இன்று காலை பீரோ உடைக்கப்பட்டு இருந்ததை கண்ட படவேட்டம்மாள் அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து வாணாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளையடிக்கபட்ட சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!