18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அம்மா பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பெண்களுக்கு குடம் வழங்கப்பட்டது.

உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அம்மா பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பெண்களுக்கு குடம் வழங்கப்பட்டது.

எழுதியவர்: mohan March 11, 2020, 7:30 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 18வது வார்டில் மறைந்த முன்னாள் முதல்வரின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு அந்த பகுதி பெண்களுக்கு குடம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுக சார்பில் உசிலம்பட்டி நகர செயலாளர் பூமாராஜா மற்றும் 18வது வார்டு கிளை செயலாளர் ஆனந்தன் ஆகியோர்கள் கலந்துகொண்டு சுமார் 150க்கும் மேற்பட்ட பெண்களுக்கு குடங்களை வழங்கினார்கள்.

கோடைகாலம் நெருங்கி வரும் நிலையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க குடங்கள் வழங்கியதாகவும், அதிக குடிநீர் தேவைப்படும் பட்சத்தில் குடிநீரை சேமித்து வைப்பதற்காகவும் பெண்களுக்கு குடங்கள் வழங்கியுள்ளதாகவும் அதிமுகவினர் தெரிவித்தனர். குடங்கள் வழங்கிய அதிமுகவினருக்கு அந்த பகுதி பெண்கள் நன்றி தெரிவித்தனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!