18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழக பாரதீய ஜனதா தலைவராக எல்.முருகன் நியமனம்-பா.ஜ.க தேசிய தலைவர் ஜெ.பி நட்டா அறிவிப்பு

தமிழக பாரதீய ஜனதா தலைவராக எல்.முருகன் நியமனம்-பா.ஜ.க தேசிய தலைவர் ஜெ.பி நட்டா அறிவிப்பு

எழுதியவர்: mohan March 11, 2020, 6:04 pm

தமிழக பாஜகவின் புதிய தலைவராக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவரான எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழக பாஜகத் தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் சென்ற பிறகு தமிழக பாஜக தலைவர் பதவி காலியாக இருந்தது. பல மாதங்களாக புதிய தலைவர் அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.இந்தப் பதவிக்கு பல தலைவர்கள் போட்டி போட்டதாக செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது. எச் ராஜா, நயினார் நாகேந்திரன், பொன் ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன், டிகே ராகவன் ஆகியோர் கடுமையாக இந்த பதவிக்கு போட்டியிட்ட நிலையில் தமிழக பாஜகவின் புதிய தலைவராக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவரான எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!