17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பெரியகுளத்தில் வீட்டில் வைத்துள்ள நாட்டு வெடி தீடீரென வெடித்ததில் தாய் மற்றும் மகள் சம்பவ இடத்தில் பலி

பெரியகுளத்தில் வீட்டில் வைத்துள்ள நாட்டு வெடி தீடீரென வெடித்ததில் தாய் மற்றும் மகள் சம்பவ இடத்தில் பலி

எழுதியவர்: mohan March 11, 2020, 5:26 pm

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை வரதப்பர் தெருவில் குடியிருந்து வருபவர் கோபி. இவர் திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் வெடி தயாரித்து விற்பனை செய்து வந்த நிலையில் அவர் மறைந்து விட்டதால் அவருடைய மகள் நிவிதா மற்றும் மனைவி பாண்டியம்மாள் இந்த தொழிலை செய்து வந்தனர். இந்நிலையில் இன்று வழக்கம்போல் வெடி தயாரித்துக் கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக வெடி வெடித்து விபத்துக்குள்ளானது .

இதில் 45 வயதுள்ள பாண்டியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் .படுகாயமடைந்த அவருடைய 18 வயதுள்ள நிவிதா என்ற மகள் பலத்த தீ காயத்துடன் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் பெண்மணியை தன் கையால் தூக்கிச் சென்று காப்பாற்றும் முயற்சியில் பெரியகுளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முகமது யாஹ்யா ஆட்டோவில் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிவைத்த பின் மேல் சிகிச்சைக்காக தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் நிவிதா உயிரிழந்தார். சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே பெரியகுளம் தீயணைப்புத் துறையும் பெரியகுளம் காவல்துறையும் விரைவாக செயல்பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர்..நகரின் மையப் பகுதியில் நடந்த இந்த வெடி விபத்து மிகப்பெரிய பரபரப்பையும், ஒரே வீட்டில் தாயும் , மகளும் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தையும், சோகத்தையும் உண்டாக்கியுள்ளது.

இவண்.சாதிக்பாட்சா நிருபர் தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!