17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி-மாணவர்கள் சார்பில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு பேரணி.

உசிலம்பட்டி-மாணவர்கள் சார்பில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு பேரணி.

எழுதியவர்: mohan March 11, 2020, 5:12 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கவணம்பட்டி ரோட்டில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியான நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் கொரோனா வைரஸ் குறித்து மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை தொட்டப்பநாயக்கணூர் ஆரம்ப சுகாதார வட்டார வளர்ச்சி மருத்துவர் சுசிலா தொடங்கி வைத்தார். இந்த பேரணி பள்ளயிலிருந்து தொடங்கி கவணம்பட்டி சாலை, பேரையூர் ரோடு போன்ற சாலைகளின் வழியாக கொரானா விழிப்புணர்வு குறித்து விழிப்புணர்வு பதாகைகளுடன் கையில் ஏந்தியவாறு பேருந்து நிலையம் சென்று பொதுமக்களுக்கு கொரானா வைரஸ் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மேலும் மாஸ்க் அணிந்து செல்வது, முக்கிய இடங்களில் செல்லும் போது 2 அடி தள்ளி நின்று பேசுவது , கைகளை கழுவுதல் போன்ற பல்வேறு விழிப்புணர்களை பொதுமக்களுக்கு ஏற்படுத்தினர். இதில் பள்ளி தலைமையாசிரியர் மதன்பிரபு மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், தொட்டப்பநாயக்கணூர் ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!