17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே சமத்துவபுரத்தில் பெண்கள் சுய வேலைவாய்ப்பு பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியர் வினய் பார்வையிட்டார்.

உசிலம்பட்டி அருகே சமத்துவபுரத்தில் பெண்கள் சுய வேலைவாய்ப்பு பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியர் வினய் பார்வையிட்டார்.

எழுதியவர்: mohan March 11, 2020, 4:55 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சமத்துவபுரத்தில் பெண்களுக்கான சுயவேலைவாய்ப்பு பயிற்சி முகாம் அங்குள்ள அம்மா பூங்காவில் உள்ள அறையில் கடந்த 5நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த பயிற்சியில் நரிக்குறவ பெண்கள் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் பயிற்சியின் இறுதிநாளில்  பயிற்சி முடித்துள்ள பெண்களுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழாவில் மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் கலந்து கொண்டு சான்றிதழ் வழங்கினார். இதில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியருக்கு நரிக்குறவ பெண்கள் பாசிமாலையை கழுத்தில் அணிவித்து மரியாதை செய்தனர். இந்த பயிற்சியில் பெண்கள் குறைந்த விiயில் உருவாக்கிய பேப்பர்பை, பினாயில், கோலப்பொடிகள் மற்றும் நரிக்குறவ பெண்கள் உருவாக்கிய ஊசி,பாசிமாலைகள், முத்ராச்மாலைகள், -வலையல்கள், அணிகலன்கள் போன்றவைகளை கண்காட்சிக்காக வைக்கப்பட்டு, அதனை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். இதில் நரிக்குறவ பெண்கள் உருவாக்கியதை பார்த்து அந்த பெண்களை பாராட்டினார். இதில் உதவி ஆட்சியர் ஜோதிசர்மா,கோட்டாட்சியர் ராஜ்குமார், வட்டாட்சியர் செந்தாமரை, மகளிர் சுயஉதவிகுழு அஜய்கிருஷ்ணன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் உக்கரபாண்டி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!