17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சரியான முறையில் பேருந்து இயக்காத காரணத்தினால் பொதுமக்கள் சாலை மறியல்

சரியான முறையில் பேருந்து இயக்காத காரணத்தினால் பொதுமக்கள் சாலை மறியல்

எழுதியவர்: mohan March 11, 2020, 4:48 pm

மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்துகள் பல்வேறு பகுதிகளுக்கு இடப்பட்டு வருகிறது. மேலும் ஸ்மார்ட் சிட்டி வேலை நடைபெறுவதால் பேருந்துகள் அங்கங்கே பிரித்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  மாலை மூன்று முப்பது மணி அளவில் விரகனூர் மற்றும் சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் வெகுநேரமாக இயக்கப்படாத காரணத்தினால் பொதுமக்கள் சிலர் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்த திடீர்நகர் காவல்துறையினரும் மற்றும் போக்குவரத்து போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை சமரசம் செய்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உரிய முறையில் பேருந்துகள் இயக்கப்படும் என உறுதி அளித்த பிறகு மறியல் கைவிடப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!